தமிழீழ ஆதரவாளர்கள் தாக்கலாம்: மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு

tn-policeஇலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்தது தமிழகம் எங்கும் உள்ள பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவரும் நிலையில், மத்திய அரசு அலுவலகங்களை தாக்கலாம் என்ற சந்தேகத்தில் பல்வேறு மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு போலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள தபால் நிலையங்கள், வருமான வரி அலுவலகங்கள், பாஸ்போர்ட் அலுவலகங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொலிஸார் 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மேலும், 33 ரோந்து வாகனங்களிலும் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply