அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன், வாசிங்டனில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், மற்றும் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அச்சந்திப்பின்போது தமிழ்த் தேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றவரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விளக்குவார்.
















