விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை

vikineswaran5வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) மதியம் வட மாகாண முதலமைச்சர் இருதய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நலமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் மருத்துவ பரிசோதனையின் பின் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் 24 மணிநேரம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாகவும் நாளைய தினமே வீடு திரும்புவார் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply