சர்வதேச ஊடகவியலாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

ifj-pressசர்வதேச ஊடகவியலாளர் பேரவையின் ( IFJ ) ஊடகவியலாளர்கள் இருவர்உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து ஊடக கருத்தரங்கு நடத்தியதாக குறித்த ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகவியலாளர் பேரவையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயப் பணிப்பாளர் ஜாக்யூ பார்க் மற்றும் பேரவையின் உறுப்பினர் ஒருவரையும் இலங்கைக் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரியுள்ளனர்.

சுதந்திர ஊடக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் இந்த இருவரும் பங்கேற்றுள்ளனர்.இருவரும் அதிகாரமளிக்கப்படாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக குடிவரவுத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை குடிவரவுச் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக அவுஸ்திரேலிய பிரஜைகளான இருவரும் ஒப்புக்கொண்டதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த இரண்டு பேரும் கருத்தரங்கு நடாத்துவதற்காக இலங்கை விஜயம் செய்யவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்துள்ளதனை அறிந்து கொண்ட தாம், கருத்தரங்கில் பங்கேற்குமாறு கோரியதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் கருத்தரங்களில் பங்கேற்றதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: ,

Leave a Reply