பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கிடைத்தால் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சிசன் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனை அடுத்து முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பொதுநலவாய மாநாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய மாநாடு குறித்து இதுவரையும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அத்துடன் அழைப்புக் கடிதமும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கும் என நம்புகின்றேன்.
கடிதம் கிடைத்த பின்னரே மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.
இதேவேளை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















