உலகின் முதனிலை தேடுதள இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்தின் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனம் இவ்வாறு உளவு பார்த்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தங்களது தகவல்களை ஹெக் செய்துள்ளமை அம்பலமாகியுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூகிள் தெரிவித்துள்ளது,
கூகிள் மற்றும் யாகூ ஆகிய நிறுவனங்களின் தகவல்களை அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் ஊடுறுவி தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக எட்வர்ட் ஸ்னோவ்டனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்க நிறுவனங்களின் தகவல்களை உளவு பார்க்கவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனங்களின் தரவுத் தளங்களுக்குள் ஊடுறுவி தகவல்களை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் தமக்குக் கிடையாது என குறிப்பிட்டுள்ளனர். எனினும், மறைமுகமாக தகவல்களை உளவுப் பார்க்கப்பட்டதனை புலனாய்வுப் பிரிவினர் மறுக்கவில்லை.
















