கடந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பில் டெலோ சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட செந்தில்நாதன் நற்பணி மன்றத்தின் தலைவர் செந்தில்நாதன் மயூரன் அமைச்சு ஒன்றின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராரலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவர் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் அமைச்சுக்கான வவுனியா மாவட்ட இணைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து செந்தில்நாதன் மயூரன் தெரிவிக்கையில்,
வடமாகாண சபைத் தேர்தலில் சொற்ப வாக்குகளால் வெற்றி கைநளுவிய போதும் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் இணைப்பாளர் பதவி மூலம் இப் பிரதேச மக்களுக்கு என்னால் முடிந்தவரை சேவை செய்ய தயாராகவுள்ளேன்.
மேலும் 5 முதல் 10 பேர் கொண்ட ஓர் குழுவை அமைப்பதன் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஓர் கிராமத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.
மேலும் வன்னித் தேர்தல் தொகுதியில் டெலோ சார்பாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளேன்.
வடமாகாண அமைச்சுக்கான நீதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்யமுடியும் என்று கூறினார்.
















