இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றது குறித்த வீடியோ உண்மை என்று தெரிய வந்தால், நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும், செய்தி வாசிப்பாளராக இருந்தவருமான இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றது தொடர்பான வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதனால்இ இலங்கை அரசின் மிக கோர முகம் மீண்டும் ஒரு முறை உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
















