அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த புதன்கிழமை தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத் தலைவர்களான மார்க் வார்னர், ஜான் கோர்னின் ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
அதில், உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் கூறப்பட்டு இருந்தது.
மேலும், முதல்முறையாக, அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் என்றும், அதில் இரு அவைகளின் எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல், அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் தீபாவளிக்கு ஆதரவான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா தலைமையில் அந்நாட்டின் எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கும் தீபாவளி விழா வரும் 5-ம் திகதி வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது.
















