இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்று கூறிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க செயல் என்றார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த சிதம்பரம், காங்கிரஸ் உயர்நிலைக்குழு முடிவு எடுத்ததாக வெளியான செய்தி தவறானது என்றார்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிதம்பரம், இறுதி முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை கூறியிருப்பதால், உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றார்.
இசைப்பிரிவை இலங்கை ராணுவம் கொன்றது பற்றி வீடியோ சேனல் 4 வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
















