ஆபிரிக்க நாடான மாலியின் வடபகுதி நகரான கிடலில், றேடியோ பிரான்ஸ் இன்ரநசனல் செய்தியாளர்கள் இருவர் ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவரைப் பேட்டி கண்டபின்னரே இவர்கள் இருவரும் கடத்தப்பட்டிருந்தனர். இந்தக் கொலைகளை பிரான்ஸ் அதிபர் கண்டித்துள்ளார்.
















