வடக்கு மாகாண முதலமைச்சரை வெளியேற்றுவதுதான் ஒரே இலக்கு

தமிழினத்தை அழித்தவர்களும் அவர் களுக்கு முண்டுகொடுத்தவர்களும் இன்னும் உறங்கவும் ஓயவும் இல்லை.

தமிழினம் தலைநிமிரக்கூடாது என்பதில் இவர்கள் கடும்பிடியாக நிற்கின்றனர்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் தம் இனத்தாலும் சிங்கள இனத்தாலும் சர்வ தேசத்தாலும் ஏமாற்றப்பட்டவர்களாகிவிட்டனர்.
உயிரிழப்பைத் தவிர வேறு எதுவுமில்லை என்ற நிலையில், தமிழ் மக்களின் உரிமைக் காகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினரும் தங்களின் கடமைப் பொறுப்புக்களை மறந்து விட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எங்ஙனம் தங்கள் கைக்குள் வைத்திருப்பதென்பதை நல் லாட்சி நன்றாக அறிந்து அதற்கேற்றாற்போல் செய்ய,வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பது முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது வரை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஆளுந்தரப்பின் ஓர் அங்கமாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறது.

இதுதவிர, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் கூட தனது கட்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு ஆளாகிவிட்டார்.
ஆக, கூட்டமைப்பின் இயங்குநிலை என்பது சம்பந்தரின் கையை விட்டு விலகிப் பல தூரம் சென்றுவிட்டது.

இப்போது கூட்டமைப்புச் செய்வதெல்லாம் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. சபையிலும் சர்வதேச சமூகத்திலும் இருந்து காப்பாற்று வதுதான்.
இதன்காரணமாகவே ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுக்க வேண் டும் என நம்மவர்கள் கூறுமளவுக்கு நிலைமை யுள்ளது.

இதெல்லாம் மக்கள் எங்கு உணரப் போகி றார்கள் என்ற நினைப்பில் வல்லவன் பம்பரம் மணலிலும் சுற்றுகிறது.

நிலைமை இதுவாக இருக்கையில், இப் போதிருக்கின்ற சூழ்நிலையில் வடக்கின் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அரசின் போக்கையும் வெளிப்படையாகக் கூறிவருகிறார்.

சமஷ்டி என்பதுதான் இனப்பிரச்சினைக் கான ஒரே தீர்வு. காணி மற்றும் பொலிஸ் அதி காரம் தமிழர்களுக்குத் தந்தாக வேண்டும் என்பவற்றைக் கூறும்போது,

ஓகோ! எல்லோரையும் அடக்கினோம். இப் போது நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூறி இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை மீண்டும் ஏற்படுத்தி விடுவாரோ என்று உணர்ந் தவர்கள்,
உள்ளிருந்து வேரறுக்க வல்லவர்களைத் தூண்டிவிட, அவர்கள் முதலமைச்சருக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுத்து அவரை கொழும்புக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதில் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.

இந்த உபாதைகளை முறியடித்து முதல மைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்ந் தும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க, தமிழ் மக்கள் அவரின் பாதுகாப்புக் கேடயங் களாக இருக்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!