உலகிலேயே மிக அரிதான பெரிய ஆரஞ்சு நிற வைரம் அடுத்த வாரம் ஏலத்திற்கு வரவுள்ளது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் வருகிற 5ம் திகதி இந்த வைரம் ஏலத்தில் விடப்பட உள்ளது.
இது 17 முதல் 20மில்லியன் டொலர் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து ஏல நிறுவனமான Christie´s சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இது உண்மையிலேயே மிக அரிதான வைரமாகும்.
இதன் நிறம் வைரத்திற்கு அழகை மேலும் மெரூகூட்டுகிறது.ஒரு பாதாமின் அளவில் உள்ள இந்த வைரத்தின் எடை 14.82காரட் ஆகும்.
தென்னாபிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தை Fire Diamonds என்றும் அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.இதேநோளில் Sotheby´s என்ற நிறுவனத்தால் 59.60காரட் எடை கொண்ட பிங் நிற வைரம் ஏலத்தில் விடப்பட உள்ளது, இது 60 மில்லியன் டொலர் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
















