டைட்டிலை மாற்றி 18 கோடி ரூபாய் மோசடி?: கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கு எதிராக வழக்கு

alagurajaகார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ள அழகுராஜா படம் நேற்று தீபாவளியன்று உலகமெங்கும் ரிலீசானது. இந்த படத்தின் டைட்டில் தான் இப்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. படத்தின் டைட்டிலில் அரசை ஏமாற்றி மோசடி செய்து வரிவிலக்கு பெற்றுள்ளார்கள் என்று சென்னையை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படம் வர்த்தக நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கும். தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் படங்களுக்கும் வரிவிலக்கு அளித்து வருகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும், சாலைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களிலும் படத்தின் பெயர் ஆல்இன்ஆல் அழகுராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் பெயரை ‘அழகுராஜா’ என்று குறிப்பிட்டு அரசிடம் வரிவிலக்கு பெற்றுள்ளனர்.

வரிவிலக்கு சலுகை வழங்கப்படாவிட்டால் தயாரிப்பாளர் அரசுக்கு 18 கோடி ரூபாய் வரியாக செலுத்தியிருப்பார். ஆனால் படத்தின் தலைப்பை மாற்றி அரசை ஏமாற்றி உள்ளார். எனவே இந்த படத்துக்கு தரப்பட்ட வரிவிலக்கு சலுகையை ரத்து செய்ய வேண்டும். படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த படத்துக்கான தணிக்கை சான்றிதழை தயாரிப்பாளர் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், படத்தின் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

படம் எடுக்கிறது ஈஸி, ஆனா அதை ரிலீஸ் பண்றது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம் போல…

Tags: , , , ,

Leave a Reply