கொலைக்குக் கொலையா? – ஏ.ஜே.ஞானேந்திரன், சுவிஸ்

Missouri death penalty lethal injectionமனிதனை மனிதனே கொல்வது எந்த வகையில் நியாயப்படுத்தலாம்?. பழிக்குப் பழி என்பதுபோல இரத்த வெறி கொண்டு அலையும் மனிதன் இன்னொருவனைக் கொல்வது மிருகத்தனம் என்றே சொல்லத் தோன்றுகின்றது. மரணத்தால் ஒருவனைத் தண்டிப்பதன் மூலம் இந்த உலகம் திருந்தி விடுமா? கொலைக்குக் கொலைதான் நியாயமான தீர்வா?

அண்மையில் அமெரிக்காவில் நடந்த கணிப்பீடு ஒன்றில் , கொலையாளிகளாகச் சிறையில் இருப்பவர்களுக்கு மரண தண்டனைதான் தேவை என்பதற்குச் சார்பாக 60 வீதமானவர்கள் வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. 1972ம் ஆண்டிலிருந்து இன்றுவரையிலான காலகட்டத்தில், இந்த 60 வீதமான ஆதரவுதான் மிகக் குறைந்தது என்று சொல்லப்பட்டாலும், மரண தண்டனைகளுக்கு ஆதரவாக பொரும்பான்iமான வாக்குகள் இன்னமும்; விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. 90களில் இந்த ஆதரவின் உச்சக்கட்டமாக, 80 வீதமான அமெரிக்கர்கள், வாக்கெடுப்பில் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

2000மாவது ஆண்டிற்குப் பின்னர், பல அமெரிக்க மாவட்டங்களில் தவறான பல குற்றவாளிகள் மரண தண்டனை பெற்றதன் விளைவாகவே, இந்த ஆதரவில் இப்படியொரு சரிவு என்று அவதானிகள் கருதுகின்றார்கள். 2006ம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில், ஆறு அமெரிக்க பிராந்தியங்கள், மரணதண்டனை ஒழிப்பை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளன. மிகப்பிந்திய பிராந்தியமாக அமெரிக்காவின் மேரிலான்ட் மரணதண்டனை ஒழிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இநதக் கொல்லும் வெறி நில்லாதா?

சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு கோரச் சம்பவம், இந்த வெறி தொடரத்தான் போகின்றது என்று உறுதியாகச் சொல்கின்றது. இந்த நாட்டின் பிரபல்ய காற்பந்தாட்ட வீரர்களுள் ஒருவராக முன்பிருந்த ஒரு விளையாட்டு வீரர் கொல்லப்பட்டிருக்கின்றார். தலைநகரில் இந்த கோரக் கொலை சம்பவித்துள்ளது. 35 வயதான இந்த விளையாட்டு வீரரின் தலையை அறுத்து, அவர் வீட்டுக் கதவில் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் கொலையாளிகள். சிரச்சேதம் செய்தவர்கள், நாக்கைத் துண்டித்து, ஒரு கண்ணையும் அகழ்ந்தெடுத்துவிட்டுத்தான், தலையை வீட்டுக் கதவடியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.

மெக்ஸிக்கோவில் இன்னுமொரு மிருகத்தனமான சிரச்சேதம். பொதுமக்கள் பார்க்கும் வண்ணம், இளம் பெண் ஒருத்தியின் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிவிட்டு, ஆட்டின் கழுத்தை அறுப்பது போல, தலை முடியைப் பற்றிப் பிடித்து, கூரிய கத்தியால் கழுத்தை அறுத்துள்ளளான் ஒரு முகமூடியணிந்த மனித மிருகம். பின்பு துண்டித்த தலையைக் கையில் பிடித்தபடி அவன் நிற்க, அதைக் கைத்தொலைபேசியில் படம் பிடித்து இணையத்தில் ஒளிபரப்பியும் இருக்கின்றார்கள்.

Auguste_Vaillant_execution

அண்மையில் இங்கிலாந்தில் நடந்த இன்னொரு பயங்கர சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 79 வயதான ஒரு முதியவர், தனது 82 வயதான மனைவியை துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்றிருக்கின்றார். 45 வருடங்களாகத் தம்பதிகளாக வாழந்தவர்களின் கதை இப்படி முடிந்திருக்கின்றது. தன் கைத்தடியினால் மனைவியின் கழுத்திலும் தலையிலும் 22 தடவைகள் மாறி மாறி அடித்து உயிரை மாய்த்துள்ளார் இந்த மனிதர். பணவிடயத்தில் சுத்த உலோபியான கணவன், மனைவி தேவையின்றி சூடேற்றியை இயங்கச் செய்து தனக்குத் தேவையற்ற பணச் செலவை ஏற்படுத்தி விட்டார் என்பதுதான் இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு காரணம். உயிரே உன் விலைதான் என்ன????

அமெரி;க்காவின் அரிஸோனா மாவட்டத்தில்; 71வயதான ஒரு வயதாளியின் மரண தண்டனையை சென்ற புதனன்று (30.10.13) நிறைவேற்றி இருக்கின்றது. இந்த அமெரி;க்க மாவட்டத்தில் மரண தண்டனை பெற்ற அதிகூடிய வயதாளியாக இவரே இடம்பெற்றிருக்கின்றார். ஒரு கொள்ளையின்போது இன்னொருவரைக் கொன்ற குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை இது. இச் சம்பவம் நடந்த காலம் 1978. விஷஊசி ஏற்றப்பட்டு கொல்லப்பட்ட இவர், தான் எவரையும் கொல்வில்லை என்றே இறுதிவரை சொல்லி வந்திருக்கின்றார். அமெரிக்காவின் சரித்திரத்தில் 1976இலிருந்து இதுவரையில் மரணதண்டனை பெற்றவர்களில் மிஸிஸிப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 77 வயதான ஜோண் நிக்ஸன் என்பவர்தான் மரண தண்டனை பெற்றவர்களில் மிகவும் வயதானவர். 2005இல் இவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஏன் எதற்கு என்ற காரணம் எதுவும் இல்லாமல் இன்றைய நாட்களில் கொலைகள் விழும், கொலையுதிர் காலமாக இன்றைய உலகம் மாறிவருகின்றது.

முன்பெல்லாம் உலக நாடுகள் பலவற்றில் மரணதண்டனைகள் அமுலில் இருந்து வந்திருப்பினும், இன்றைய நிலையில் 58 உலக நாடுகள் மாத்திரமே, மரண தண்டனையை தீவிரமாகச் செயற்படுத்தி வருகின்றன. 97 நாடுகள் எந்தக் குற்றமாக இருப்பினும், மரண தண்டனை அளிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளன.8 நாடுகள் சாதாரண குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளன. இன்னும் 35 நாடுகள் கடந்த 10 வருடங்களாக, எவருக்குமே மரண தண்டனை வழங்காது இருந்து வருகின்றார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், 140 நாடுகள் மரண தண்டனை வழங்குவதிலிருந்து விலகிக் கொண்டிருக்கின்றன.

பல நாடுகள் மரண தண்டனைகள் வழங்குவதை நிறுத்தியிருப்பினும், உலக ஜனத்தொகையின் 60 வீதமானவர்கள் மரண தண்டனை வழங்கும் நாடுகளிலேயே வாழ்கின்றார்கள் என்பதை இங்கே கவனித்தாக வேண்டும். குறிப்பாக பெரும் ஜனத்தொகையைக் கொண்ட சீனக்குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய உலக நாடுகளைக் கூறலாம்.மரண தண்டனை வழங்குவதை நிறுத்த ஐ.நா. சபை கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக இந்த நான்கு நாடுகளும் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றன.

முன்னைய காலங்களில், ஒருவருக்குரிய மரண தண்;டனையை எப்படி எப்படியெல்லாம் நிறைவேற்றி வந்திருக்கிறார்கள் என்று அறிய வரும்போது, அதன் குரூரம் நம்மை ஒரு தடவை உலுப்பியெடுக்கி;னறது. வாளால் உடலை அறுப்பது, சிலுவையில் அறைந்து சித்திரவதைப்படுத்துவது, யானையின் காலால் மிதித்துக் கொல்வது, , கொதி எண்ணெயில் போட்டுக் கொல்வது, உடலில் அவயவங்களைக் கிழிப்பது, வயிற்றைக் கிழித்து, குடலை வெயியே தள்ளுவது என்று ஒரு மனிதனை உயிரோடு வைத்து, அவன் இறக்கும் வரை செய்த சித்தரவதை முறைகள் ஏராளம் ஏராளம். பார்ப்பவர் பயப்பட வேண்டும் என்று அரசே சட்டரீதியாகச் செய்து வந்த மரண தண்டனைகள்தான் இவை!Missouri death penalty lethal injection

வருடா வருடம் ஒக்டோபர் 10ந் திகதி, மரண தண்டனைக்கு எதிரான நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு;ள்ளது. இந்த வருடம் 11வது ஆண்டு நிiறைவை அது கண்டுள்ளது. இரண்டு நாட்களில் ஈராக் அரசு 42 பேருக்கு மரண தண்டனை வழங்கியது என்று ஐ.நா. சபை இத் தினமன்று ஈராக் அரசைச் சாடியுள்ளது. கடந்த 2 வருடங்களில் ஈராக் அரசு எண்ணற்றவர்களைக் கொன்றிருக்கின்றது. இது மனித்தன்மை அற்றது என்று வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். ஆனால் அரசோ தன் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றது. நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் கொல்கிறோம் என்று விளக்கம் அளிததிருக்கின்றது ஈரானிய அரசு. 2010இல் அரசால் கொல்லப்பட்டவர்கள் தொகை18. அடுத்த ஆ;ணடு இத் தொகை 67ஆக உயர்ந்தது. 2012இலோ 123.இந்த வருடம் இதுவரையில் அரசின் கையால் மரணித்தவர்கள் தொகை 140.

அந்தந்த நாட்டு அரசுகளே தன் பிரஜைகளுக்கு மரணதண்டனை வழங்கி வருவது காட்டுமிராண்டித்தனமானது என்பதே இத் தினத்தில் (ஒக்டோபர் 10) வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்காவும், பிரித்தானியாவும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தாலும், சில விடயங்களில் இரு நாடுகளும் முரண்பட்டே நிற்கின்றன. உதாரணத்திற்கு இந்த மரண தண்டனை வழங்குவதில், பிரித்தானிய அரசுக்கு அடியோடு உடன்பாடு இல்லை. 1969இலேயே மரண தண்டனை வழங்குவதை நிறுத்திவிட்டது பிரித்தானிய அரசு. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளும்;, இந்த விடயத்தில் ஒற்றுமையாக நின்றுவருகின்றன.

ஒரு கைதியை விசாரணக்காக மாதக்கணக்கில் சிறைக் கைதியாக வைத்திருக்கும்போது ஏற்படும் செவைவிட, ஒருவருக்குத் மரண தண்டனை வழங்கும்போது ஏற்படும் செலவு மிக அதிகம் என்கிறார்கள். உதாரணத்திற்கு 1978இல் அமெரிக்காவில் மிண்டும் அமுலுக்கு வந்த மரண தண்டனை வழங்கும் முறையால,; இந்தக் குற்றம் நிறைவேற்றப்பட ஏற்படும் செலவை ஈடுசெய்ய கலிபோர்னியர்கள் 4 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட தொகையை வரியாகச் செலுத்தியுள்ளார்கள்.

அதிஸ்டவசமாக மரணதண்டனை நிறைவேற்றும் வழமை பல நாடுகளில் நீக்கப்பட்டு வருவது, மனதிற்குப் பெரும் ஆறுதல் அளிக்கும் விடயம். 2012இல் அதாவது கடந்த ஆண்டில், 21 நாடுகள் மாத்திரமே மரண தண்டனைகளை நிறைவேற்றி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம். ஒரு தசாப்த காலத்திற்கு முன்பு மரண தண்டனை நிறைவேற்றிய நாடுகள் தொகையின் மூன்றிலொரு தொகைதான் இது எனபதைக் கவனித்தாக வேண்டும். கணிசமான

வீழ்ச்சி இது! அமெரிக்காவிலும் இதுவரையில் ஆறு மாவட்டங்கள் ஆறு வருடங்களில் இல்லாதொழித்திருப்பது இன்னொரு போற்றுதலுக்குரிய மாற்றம்.

மரண பயம் மனிதனுக்கு வரும் பொல்லாத பயம். பல அட்டூழியங்களைச் செய்பவனைக் கொல்வது, அதே அநியாயங்களைச் செய்யும் இன்னொருவனுக்கு அச்சம் ஊட்டுவதாக இருக்கும். பல கொலையாளிகள் உருவாகுவதை, எமது கொலைகள் நிறுத்தும் என்று இன்னும் சில அரசுகள் நம்பிக் கொண்டிருக்கின்றன. எனவே மரண தண்டனைகள் அளிப்பதையும் தொடர்கின்றன.

மனித படைப்பை அழிக்க மற்றைய மனிதனுக்கு உரிமையில்லை. ஒருவனுக்கு தன்னுயிரை எடுக்கவே உரிமை இல்லை என்ற நிலையில், எப்படி இன்னொருவர் அதைச் செய்ய முடியும்?

தவறுகளைத் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு, மரண தண்டனைகள் வழங்கி பல அரசுகள் தாமே தவறு இழைக்கின்றன என்பதையே பல அமைப்புகள் வலியுறுத்தி வரும் இந் நிலையில், மனிதனுக்கு கிலி ஏற்படுத்தும் இந்த மரண தண்டனைகளை நாம் நிறுத்தத் தயாராக இல்லை என்று பிடிவாதமாக தங்கள் பணியைத் தொடர்கின்றன சீனா போன்ற நாடுகள்.

கொல்லும் வெறி நில்லாதா? கேள்விக் கணையைத் தொடுக்கின்றோம். எதிர்காலந்தான் பதில் தரவேண்டும்.

-ஏ.ஜே.ஞானேந்திரன், சுவிஸ்

Tags: , ,

Leave a Reply