எம்.பி.யின் பாலியல் சில்மிஷம்: நடிகை திடீர் பல்டி

shwetha-menonஇந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த 73 வயதான காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்வேதா மேனன் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார்.

பீதாம்பர குருப்பு மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெறப் போவதாக அவர் அறிக்கை விடுத்துள்ளார். ஸ்வேதாவின் புகாரின்பேரில் குருப்பு மீது பொலிஸார் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்வேதா.

குருப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், இந்த முடிவுக்கு தான் வந்திருப்பதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பீதாம்பர குருப்பு பகிரங்கமாகவும், என்னிடம் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

எனவே அவருக்கு எதிரான அத்தனை சட்டரீதியான நடவடிக்கைகளையும் நான் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கேட்டபோது, மேனனிடமிருந்து அப்படி எந்த அறிக்கையும், கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றனர்.

ஆனால், இன்று காலை புகாரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்வேதாவின் கணவர் கூறியுள்ளார்.

கொல்லத்தில் நவம்பர் 1ம் திகதி நடந்த படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஸ்வேதாவிடம் கையை உரசியம், தொட்டும் சில்மிஷம் செய்தார் குருப்பு என்பது ஸ்வேதாவின் புகார்.

அதன் பேரில் பொலிஸார் நேற்று வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.

Tags: , , ,

Leave a Reply