டுவிட்டரில் அதிக பின் தொடர்வோரை ( பளோவர்கள்) கொண்ட பிரபலமாக கெடி பெரி மாறியுள்ளார்.
அமெரிக்கவைச் சேர்ந்த கெடி பெரி பாடகி, வியாபரப் பெண்மணி,நடிகை என பல முகங்களைக் கொண்டவர்.
கெடி பெரி கடந்த ஜனவரி மாதம் முதல் டுவிட்டர் சமூக வலையமைப்பில் அதிக பின் தொடர்வோரைக் கொண்டிருந்த கனேடிய பொப் இசைக் கலைஞரான ஜஸ்டின் பைபரை பின் தள்ளியுள்ளார்.
தற்போது டுவிட்டரில் ( இச்செய்தி எழுதப்படும் வரை ) கெடி பெரி 46, 503, 556 பின் தொடர்வோரையும், பைபர் 46, 489, 839 பேரை பின் தொடர்வோராகவும் கொண்டுள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் பின் தொடர்வோரைக் கொண்டவராக அமெரிக்கப் பாடகியான லேடி ககா இருந்து வந்தார்.
எனினும் அவரை பைபர் கடந்த ஜனவரியில் முந்தினார். இந்நிலையில் கெடி பெரி, பைபரை முந்தியுள்ளார்.
லேடிககா தற்போது 40,398, 111 பின் தொடர்வோருடன் 3 ஆவது இடத்திலும் 39,272. 921 பளோவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.
















