வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது

uk-flagவீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது.

3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வீசா காலம் முடிவடைந்து தங்கியிருந்தால் அந்தப் பிணைப்பணம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பிணைப்பணத் தொகை அறவீடு செய்வது வீசா விண்ணப்பதாரிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமையக் கூடுமென விமர்சனங்கள் எழத் தொடங்கியதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply