ஐ படத்திற்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா? ஷங்கர் விளக்கம் !

Amy-Jacksonஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் தான் ஐ. இந்த படம் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகிவருகிறது. சமந்தா, திரிஷா, கஜல் அகர்வால் போன்ற அழகான நடிகைகள் இருக்கும் போது, வெளிநாட்டு வெள்ளைக்கார பெண்ணான எமி ஜாக்சனை ஹீரோயினாக்கினார் இயக்குனர் ஷங்கர்.

அது ஏன் என்பதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக ‘ஐ’ என்றாலே அழகை குறிக்கும் சொல். படத்திலும் அழகிற்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அழகை பற்றித்தான் படம் பேசுகிறது. அதற்கு அழகான ஹீரோயின் தேவைப்பட்டார். நூற்றுக்கணக்கான இந்திய பெண்களை ஆடிசன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருமே அழகுதான், ஆனால் என் மனசுக்குள் இருந்த அந்த கதாபாத்திரத்திற்கு யாரும் செட்டாகவில்லை. 

பிறகுதான். எமி ஜாக்சன் மயிண்டுக்கு வந்தாங்க, முதலில் பிரிட்டீஷ் பொண்ணு சரியா வரமாட்டாங்கன்னுதான் தோணிச்சு. பி.சி.ஸ்ரீராம் தான் ஆடிசன் பண்ணி பார்த்துடலாமுன்னு சொன்னார். அதன்படி அவரை அழைச்சிட்டு வந்து ஆடிசன் பண்ணினோம். ஸ்கிரீன்ல தெரிஞ்சது எமி இல்லை. என் மனசுக்குள்ள இருந்த கதாபாத்திரம். எனவே அவரையே நடிக்க வச்சோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவர் நன்றாக நடித்தார் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply