பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் முடிவை பிரிட்டன் அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈழத் தமிழரொருவர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சுப்பிரமணி பரமேஸ்வரன் என்ற இளைஞரே பிரிட்டன் பிரதமரின் இல்லம் அமைந்துள்ள டவுனிங்க் வீதியின் முகப்பில் இந்த உண்ணாவிரத்தைத் தொடங்கியுள்ளார்.
பிரிட்டன் அரசு தனது முடிவை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று பரமேஸ்வரன் அறிவித்துள்ளார்.
















