பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து மன்மோகன் உடனடியாக தீர்மானிக்க வேண்டும்; சுப்ரமணியம் சுவாமி

subramanian-swamyபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தீர்மானிக்க வேண்டுமென ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 – 16ம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தீர்மானித்து அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் தேசிய நலனைக் கருத்திற் கொண்டே பிரதமர் தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படுவதாகத் தெரிவித்து அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இந்திய பிரதமர் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

Tags: , ,

Leave a Reply