இசைப்பிரியா படுகொலை பிரதிபலிப்பு ஐநாவில் தெரியவரும் – தொல்.திருமா சூளுரை

Thirumavalavanஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புற்கணிக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புற்கணிக்ககோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஆர்பாட்டத்தில் 100க்கணக்கானோர் கலந்து கொண்டு இந்தியா காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் இது குறித்து தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது,

காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது கண்டிக்கதக்கது என்று தெரிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் ஆகியோர்கள் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்தற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம் என்று தெரிவித்த அவர்,

இசைப்பிரியா படுகொலை பிரதிபலிப்பு வருகிற மார்ச் மாதம் ஐநா சபை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கும் விதமாக அமையும் என்று தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply