‘இரண்டாம் உலகம்’ படத்துக்கு யு சர்டிஃபிகேட்! செல்வராகவனுக்கு என்னாச்சு!

anushkaகீதாஞ்சலி ராமனை திருமணம் செய்தபிறகு சிகரெட் பழக்கத்தை விட்டது, குடிப்பழக்கத்தை விட்டது உட்பட நெறைய மாற்றங்களை செல்வராகவனிடம் பார்க்க முடிகிறது. ஆனால் அது அவரது படத்திலும் எதிரொலித்ததைத் தான் தற்போது கோலிவுட் ஆச்சரியமாகப் பார்த்து வருகிறது.

பொதுவாகவே செல்வராகவனின் படங்கள் எல்லாமே ஏ சர்டிஃபிகேட் தான் வாங்கிப் பார்த்திருக்கிறோம். அதுவும் இல்லையென்றால் அட்லிஸ்ட் யு/ஏ சர்ட்ஃபிகேட்டாவது வாங்கி விடும். ஆனால் லேட்டஸ்ட்டாக அவர் டைரக்‌ஷனில் தயாராகி வரும் ‘இரண்டாம் உலகம்’ படம் கம்ப்ளீட் யு சர்டிஃபிகேட் வாங்கியிருக்கிறதாம்.

பல கோடிகளை விழுங்கியிருக்கும் இந்தப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் டபுள் ரோலில் நடித்துள்ளனர். ரொமாண்டிக் மற்றும் பேண்டசி திரைப்படமான இப்படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்திருக்கிறது பி.வி.பி சினிமா நிறுவனம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு அனிருத் பின்னணி இசையமைத்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக எடுக்கப்பட்டு வந்த படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்திற்கு யு சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டுள்ளதால் செல்வராகவன் உள்ளிட்ட இரண்டாம் உலகம் டீமையும் சென்சார் மெம்பர்கள் வெகுவாக பாராட்டினார்களாம்.

ஏற்கெனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், வர்ணா என்ற டைட்டிலுடன் தெலுங்கிலும் வருகிற நவம்பர் 22-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

என்ன செல்வா இப்படி டோட்டலா மாறிட்டீங்க…?

Tags: ,

Leave a Reply