வவுனியா அட்டமஸ்கட பகுதியில் 2010 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் விகாராதிபதியினால் சிறுவர் துஸ்பிரயோகம் மேற்காள்ளப்பட்டதாக சிறுவன் ஒருவன் கொடுத்த மனு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இன்று (06) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் கழிக்க முடியாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சிறுவன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், 22 சிறுவர்களை தேசிய அதிகார சபையினர் பொறுப்பேற்று மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு அழைத்துச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையால் ஆறு சிறுவர்கள் நீதி மன்றில் ஆயர் படுத்தப்பட்டு அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி வே.ராமகமலன் அட்டமஸ்கட விகாரதிபதி கல்யாணதேரரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
















