இரண்டாம் உலகம் படத்தில், அனுஷ்காவுக்கு தான், முக்கியமான கதாபாத்திரம். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளதால், அந்த படத்தில், ரொம்பவே ஆர்வம் காட்டியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தார் அனுஷ்கா.
அதேபோல், ´சொந்த குரலில் பேசினால், படத்தை திரையில் பார்க்கும்போது, உங்கள் நடிப்பு யதார்த்தமாக இருக்கும்´ என இயக்குனர், அனுஷ்காவிடம் கூறினாராம்.
அனுஷ்காவும், முயற்சி செய்து பார்த்துள்ளார். ஆனால், அனுஷ்காவின் தமிழில், தெலுங்கு மற்றும் ஹிந்தி வாடை அடித்ததால், அவர் குரல் செட்டாகவில்லையாம்.
இதையடுத்து, அனுஷ்காவுக்கு, சின்மயியை டப்பிங் பேச வைத்துள்ளனர். இதனால், ´தமிழில் சொந்த குரலில் பேச முடியாமல் போய் விட்டதே´ என, வருத்தத்தில் இருக்கிறார், அனுஷ்கா.
அடுத்தடுத்த தமிழ் படங்களில், சொந்த குரலில் பேசியே தீருவது என, முடிவெடுத்துள்ளாராம். ஆனாலும், ´இரண்டாம் உலகம்´ படத்தின் தெலுங்கு பதிப்பில், அனுஷ்காவே, சொந்த குரலில் பேசியுள்ளாராம்.
















