உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் அவரது மகள் காதலனுடன் வெளியேறிய கோபத்தில் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 17 வயது இளம்பெண், தனது காதலனுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஊரைவிட்டு வெளியேறினார். அவர்கள் இருவரும் மும்பையில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே மும்பைக்கு விரைந்த பெண்ணின் தந்தை அவருடைய நண்பரின் விட்டில் தங்கியிருந்து அவ்வப்போது மகளை சந்தித்து அவரை வீட்டிற்கு திரும்பி வரும்படி வற்புறுத்தியுள்ளார்.
அவருடன் வீடு திரும்ப அப்பெண் மறுத்ததால், ஆத்திரமடைந்த தந்தை, தனது நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















