லிப் டூ லிப்புக்காக புகைப்பழக்கத்தை விட்ட கமல்

kamal2சிறு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்ட கமல் ஹாஸன் படங்களில் லிப் டூ லிப் காட்சிகளில் நடிப்பதற்காக அந்த பழக்கத்தை கைவிட்டாராம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டவர். இந்நிலையில் கமல் ஹாஸன் தன் புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி தெரிவித்துள்ளார். எதையும் வித்தியாசமாக செய்யும் கமல் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டதும் வித்தியாசமான காரணத்திற்காக தான்.

கமல் ஹாஸன் தனது 11வது வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். பல ஆண்டுகளாக இருந்த பழக்கத்தை அவர் கைவிட வேண்டிய கட்டாயம் வந்தது அவர் கதாநாயகனான பிறகு.

கமல் ஹாஸன் படம் என்றால் முத்தக் காட்சி இருக்கும். அப்படி கதாநாயகிகளுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும்போது தம்மடித்துவிட்டு கொடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார் கமல்.

நாள் முழுக்க நான் காபி குடித்துவிட்டு, தம்மடித்துவிட்டு மாலை நேரத்தில் படப்பிடிப்பில் நாயகிகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அவர்களின் நிலைமையை நினைத்து தான் தம்மடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார் கமல்.

வாலிபர்களே உங்களின் கேர்ள் பிரண்ட்ஸ் மற்றும் மனைவிகளின் நிலைமையை நினைத்தாவது நீங்கள் தம்மடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply