முஷாரப் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை!

musharrafபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி, முஷாரப்புக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால், அவர் வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனசிர் புட்டோ, 2008ல், தேர்தல் பிரசாரத்தின் போது, தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அப்போது அதிபராக இருந்த பெர்வேஸ் முஷாரப், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என, குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முஷாரப், இடைக்கால ஜாமின் பெற்றிருந்தார்.

முஷாரப், அதிபராக இருந்த போது, 2007ல், அவசர சட்டத்தின் மூலம், 60 நீதிபதிகளை,சிறையில் அடைத்தார். அரசியலமைப்பை மீறியதாக, அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிலும், அவருக்கு, முன்னதாக ஜாமின் கிடைத்துள்ளது. பலூசிஸ்தான் தலைவர், பக்டிக்கு எதிராக, முஷாரப் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதில், அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, முஷாரப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கிலும், அவருக்கு ஜாமின் கிடைத்து விட்டது. இதற்கிடையே, லால் மசூதியின் இஸ்லாமிய குரு அப்துல் ரஷீத் கொல்லப்பட்ட வழக்கில், முஷாரப்புக்கு தற்போது ஜாமின் கிடைத்துள்ளது. அனைத்து வழக்குகளிலும், ஜாமின் கிடைத்துள்ளதால், முஷாரப், வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில், முஷாரப் தற்போது, சிறை வைக்கப்பட்டுள்ளார். இனி இந்த வீடு மீண்டும் பண்ணை வீடாகச் செயல்படும். முஷாரப்புக்கு ஜாமின் கிடைத்ததை அவரது தொண்டர்கள், இந்த பண்ணை வீட்டருகே, இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.

Tags: , ,

Leave a Reply