உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோருடன் நடித்து நடிப்பின் சிகரமாக இருக்கும் கமல் ஹாசன் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான கமலுக்கு திரை உலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமல் ஹாசனின் பிறந்தநாளான இன்று விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. டிரெய்லரை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ட்விட்டரில் கமல் ஹாஸனுக்கு பிரபலங்கள், அவரது ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று கமல் தவிர இயக்குனர் வெங்கட் பிரபுவும், நடிகை அனுஷ்கா, பின்னணிப் பாடகர் கார்த்திக் மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
















