காணாமற் போனோருக்காக மெழுகுவர்த்திப் போராட்டம்; கொழும்பில் நடத்த ஏற்பாடு

Candleபொதுநலவாய மாநாடு இடம்பெறவுள்ள காலப்பகுதியில் கொழும்பில் போராட்டம் நடத்தத் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன், இருந்தும் தாம் மெழுகுவர்த்திப் போராட்டம் நடத்தவுள்ளதாகக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

கொழும்பில் பொதுநலவாய தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாடு இடம்பெறும் காலப் பகுதியில் கொழும்பில் போராட்டங்கள் நடத்துவதற்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.

இருப்பினும் ஐ.தே.க. தலைமையகமான ஸ்ரீ கோத்தாவின் பின்னால் உள்ள மைதானத்தில், 13ஆம் திகதியும் 14ஆம் திகதியும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், காணாமற் போனோர் கண்டறியப்பட வேண்டுமெனக் கோரியும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

14ஆம் திகதி போராட்ட முடிவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, நகர மண்டபத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரை மெழுகுவர்த்தி ஏந்திக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்துவர் – என்றார்.

Tags: ,

Leave a Reply