பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என தென் ஆபிரிக்க பேராயர் டெஸ்மன் டுட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை என்பதற்கு போதியளவு காரணங்கள் இருந்தால் உலக சக்திகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். மாநாட்டை புறக்கணிப்பது இவ்வாறான அழுத்தங்களில் ஒன்றாகக் கருத முடியும்.
மாநாட்டை புறக்கணிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் எவ்வாறு உணர்கின்றார்கள் என்பது அறிந்து கொள்ள வேணடும். தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நியாயம் வழங்க வேண்டுமென இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பமாக பொதுநலவாய நாடுகள் அரச தலைர்கள் மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















