கேரளத்து பெண்குட்டியான நயன்தாரா, பெரிய அசைவ பிரியையாம். குறிப்பாக, தனக்கு விருப்பமான உணவான, சிக்கன் என்றால் ஒரு பிடி அதிகமாகவே சாப்பிடுவாராம்.
ஆனால், இப்போது அந்த அசைவ உணவே, நயன்தாராவுக்கு எதிரியாகி விட்டதாம். அதாவது, அசைவம் எடுத்துக் கொண்டாலே, அவரது தோலில் அலர்ஜி பிரச்சினை ஏற்படுகிறதாம். இரண்டாவது ரவுண்டில், பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, இந்த திடீர் அலர்ஜியினால், அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
இதேபோன்று, தோல் அலர்ஜி நோயினால் சமந்தா சிகிச்சை எடுத்தது போன்று, தனக்கும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, தனது தாய் வீடான கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம் நயன்தாரா.
















