உலகப் பெரும் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல்!

World-richஉலக அளவில் நூறுகோடி டொலருக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரும் கோடீஸ்வரர்கள் குறித்து வெல்த்-எக்ஸ் மற்றும் யு.பி.எஸ் என்ற ஆய்வு நிறுவனங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.

அவற்றின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 515பேருடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 157 பேருடன் சீனா 2ஆவது இடத்திலும் உள்ளன. 148 பேருடன் ஜெர்மனி 3ஆவது இடத்திலும், 135 பேருடன் பிரிட்டன் 4ஆவது இடத்திலும், 108 பேருடன் ரஷியா 5ஆவது இடத்திலும் உள்ளன.

2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5.5 சதவிகிதம் குறைந்துள்ள போதிலும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் 103 பெரும் கோடீஸ்வரர்களுடன் இந்தியா 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் உலக அளவிலான முதல் 5 நகரங்களின் பட்டியலில் 96 பேருடன் நியூயார்க் முதல் இடத்திலும், 75 பேருடன் ஹாங்காங் 2ஆவது இடத்திலும், 74 பேருடன் மாஸ்கோ 3ஆவது இடத்திலும், 67 பேருடன் லண்டன் 4ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை 30 பெரும் கோடீஸ்வரர்களுடன்5ஆவது இடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply