இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என்கிறார் – கமலேஸ் சர்மா

kamalesh-sharmaஇலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அத்துடன், சித்திரவதைகளுக்கு எதிராக அமைக்கப்படும் உள்நாட்டு விசாரணைக் குழுவுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் அமர்வுக்காக கொழும்புக்கு புறப்பட முன்னர் அவர் இதனை வெளியிட்டுள்ளார். சித்திரவதைகளுக்கு எதிரான விசாரணைக்குழு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் கீழ் அமைக்கப்படும். அதனை பொதுநலவாய அமைப்பு மேற்பார்வை செய்வதுடன் அதற்கான உதவிகளை வழங்கும் என்று கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் அனைத்து குற்றச்செயல்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று சர்மா தெரிவித்துள்ளார். இந்தக் குழு 18 மாதங்களுக்குள் தமது பணியை முடிக்கும் வகையில் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply