மயிலிட்டி மக்களை இடைக்காட்டில் குடியேற்ற இராணுவம் நடவடிக்கை

tamil-peoplesயாழ்.மயிலிட்டி தையிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கிவாழ்ந்து வரும் மக்களை வளலாய் இடைக்காடு பகுதியில் குடியேற்ற இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை தமது வாகனங்களில் ஏற்றிக்;கொண்டு சென்று வளலாய் இடைக்காடு பகுதியில் காணிகளை இராணுவத்தினர் காண்பித்தனர்.

இதேவேளை குறித்த காணியில் குடியேற நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் இணக்கம் தெரிவித்ததோடு நீண்டகாலத்திற்கு பின்னர் சொந்தமாக காணிவழங்கப்படவுள்ளதையிட்டு தமது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது தவிர அங்கு வருகை தந்திருந்த இளைஞர்கள் கடலில் குளித்து ஆனந்தப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தையிட்டி மயிலிட்டி பகுதியிலிருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகவும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply