வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம் என்னும் அமைப்பானது வவுனியா மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைக்கும் முகமாக அரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் செயலாளர் குமாரசாமி சஜிஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம் நேற்று அருந்ததி விருந்தினர் விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன மத, மொழி பேதங்களைக் கடந்து வவுனியா மாவட்ட மக்களின் தேவைகளை இனங்கண்டு அதனை உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுவதன் மூலம் எமது பிரதேச மக்களின் வாழ்வாதரத்தையும் கட்டியெழுப்பி பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்ளும் முகமாக ஆரம்பித்து வைக்கப்படுவதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அவ் அமைப்பின் தலைவரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான தேசமான்ய சுந்தரம் குமாரசாமி, முன்னாள் நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
















