ஃபேஸ் புக் சமூக வலைதளம் மூலம் இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலத்தை 2 லட்சம் பேர் பின்தொடர்ந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர். தொடங்கப்பட்ட இரண்டே வாரத்தில் இந்த சமூக வலைதளப் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு இஸ்ரோ அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்குவதற்காக ஃபேஸ் புக் பக்கத்தை அக்டோபர் 22ம் திகதி இஸ்ரோ தொடங்கியது. இந்த பக்கத்தை நவ.8 வரை2 லட்சத்து7 ஆயிரத்து173 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து71 ஆயிரத்து704 பேர், இத்திட்டம் தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தை அனுப்புவதற்கு முன்னதாக ஒவ்வொரு நிலையிலும் படத்துடன் இந்த பக்கத்தில் தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன.விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், அதன் இப்போதைய செயல்பாடு, சுற்றுப்பாதை, பாதையின் தூரம் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் இப்பக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் இப்பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பதிவர்கள் விவாதிக்கின்றனர். ஒரு சில கேள்விகளுக்கு இஸ்ரோவும் உரிய பதில்களை வழங்கி வருகிறது. இந்த ஃபேஸ் புக் பக்கத்தை ஆர்வத்துடன் பின்தொடரும் ரகுநாதன் ஐயங்கார் என்ற பதிவர், சர்வதேச கடல் எல்லையைக் கடப்பதால் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு பலியாகும் தமிழக மீனவர்களுக்கு உதவும் வகையில் புதிய விண்வெளித் தொழில்நுட்பத்தை ஏன் உருவாக்கக் கூடாது எனவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியான பிறகும் கூட இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளும், இஸ்ரோ அமைப்பும் ஏன் சிந்திக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இத்தகைய நல்ல யோசனையை தெரிவித்ததற்காக ரகுநாதன் ஐயங்காருக்கு இஸ்ரோ அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. அதேபோல்,விண்வெளித் திட்டங்கள், விண்கலத்தில் உள்ள மோட்டார்கள் போன்றவை தொடர்பான கேள்விகளுக்கும் இஸ்ரோ பதிலளித்துள்ளது.
மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பாதை வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு வெற்றிகரமாக40 ஆயிரத்து186 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது. விண்கலத்தின் வேகம் 201 மீட்டராகவும் உயர்த்தப்பட்டது. பாதையைச் சுற்றிவர விண்கலம் எடுத்துக் கொள்ளும் நேரம் 11 மணி9 நிமிடங்கள் ஆகும். விண்கலத்தின் பாதை மூன்றாவது முறையாக சனிக்கிழமை (நவ.9) அதிகாலை2 மணி10 நிமிடங்களுக்கு அதிகரிக்கப்பட உள்ளது. மொத்தம் 12 நிமிடங்களுக்கு103 கிலோ எரிபொருள் எரிக்கப்பட உள்ளது. விண்கலத்தின் பாதை 71 ஆயிரத்து 635 கிலோமீட்டராக அதிகரிக்கப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். ஜடேஜா கருத்து
“இதுவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலங்களிலேயே இஸ்ரோ அனுப்பிய விண்கலம்தான் மிகக் குறைந்த செலவில் அனுப்பப்படுகிறது. ரூ.450கோடியில் அதாவது, கிலோமீட்டருக்கு ரூ.12 செலவில், ஆட்டோ கட்டணத்தில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் பயணம் செய்வது உண்மையிலேயே இந்திய திட்டம்தான்´.
















