பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்காமைக்கான காரணத்தை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். என்ன காரணத்திற்காக தம்மால் அமர்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்பதனை பிரதமர் சிங், ஜனாதிபதி மஹிந்தவிற்கு விளக்கி கடிதம் எழுதவுள்ளார். இந்திய ஊடகமொன்று இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதிநிதிகள் குழுவி;ற்கு வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தலைமை தாங்குவார் என மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
















