முல்லை வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை! நோயாளர்கள் சிரமம்

hospitalமுல்­லைத்­தீவு மாவட்ட பொது வைத்­திய சாலையில் ஆள­னிப்­பற்­றாக்­கு­றை அதி­க­ளவில் காணப்­ப­டு­வ­தா­கவும் இதனால் வைத்­திய சேவைகள் தாமதமடை­வ­தா­கவும் பொது மக்கள் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

யுத்­த­கா­லத்­திற்குப் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு இப் பிர­தே­சத்தில் மக்கள் மீள் குடி­யேற்­றப்­பட்ட பின்னர் இயங்­கி­வ­ரு­கின்ற முல்­லை­த்தீவு மாவட்ட பொது வைத்­தி­ய­சாலை மிகுந்த ஆள­ணிப்­பற்­றாக்­கு­றை­யுடன் இயங்கி வரு­கின்­றது.

இங்கு 8 வைத்­தி­ய­நி­புணர் தேவைப்­படும் இடத்து 4 பேர் மட்­டுமே கட­மை­யாற்றி வரு­வ­துடன் மகப்­பேற்று வைத்­தியர் ஒருவர் இல்­லாத நிலையும் காணப்­ப­டு­கின்­றது.

மேலும் நான்கு பல் வைத்­தி­ய­ருக்­கான தேவை உள்­ள­போ­திலும் 3 பல்­வைத்­தி­யர்கள் மட்டும் கட­மையில் உள்­ள­தா­கவும் 66 தாதி­யர்கள் தேவைப்படும் இடத்தில் 19 தாதி­யர்கள் மாத்­தி­ரமே உள்­ள­தா­கவும் மருந்தா­ளர்கள் 6 பேர் தேவைப்­படும் பட்­சத்தில் இருவர் மட்­டுமே கட­மையாற்றுவ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

மேலும் இவ் வைத்­தி­ய­சா­லைக்கு தினமும் சுமார் 50 வரை­யான உள்­நோ­யா­ளர்­களும் சுமார் 300 இற்கும் மேற்­பட்ட வெளி­நோ­யா­ளர்­களும் சிகிச்சைக்­காகச் செல்­கின்­றனர். அத்துடன் 100 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றும் செல்­கின்­றனர்.

இந் நிலையில் இங்கு காணப்­படும் ஆள­ணிப்­பற்­றாக்­கு­றை­யினால்இ நோயா­ளர்கள் அதிக நேரம் காத்­தி­ருக்க வேண்­டிய தேவை ஏற்­ப­டு­வ­தா­கவும் இதனால் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­ள­வேண்டி உள்­ள­தா­கவும் மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர்.

எனவே விரைவில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்துதருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply