மக்களின் பிரச்சினைகள் குறித்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிவிவகார அமைச்சர்களிடம் விளக்குவோம்: சுமந்திரன்

sumanthiran1வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொது நலவாய மாநாட்டுக்கு வரும் பிரித்தானிய அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் காணி அபகரிப்பு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் காணாமல் போனோர் குறித்த அரசாங்கத்தின் அசமந்தப் போக்கு எதுவித விசாரணைகளுமின்றி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாமை போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கான தேவை போன்ற விடயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கண்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் விளக்கமளிக்கவுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இந்நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை கூட்டமைப்பு எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் தனித்தனியாக சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply