இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பொதுநவலாய நாடுகள் அமைச்சர்கள் செயற்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற கூட்டங்களின் போது இலங்கை விவகாரம் தொடர்பில் அமைச்சர்கள் செயற்குழு உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச நியதிகளுக்கு புறம்பான வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டியது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கடமையாகும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் செயற்குழுவில் பிரித்தானியா அங்கம் வகிக்காத போதிலும், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரித்தானியாவின் சிரேஸ்ட வெளிவிவகார அமைச்சர் சய்யடா வார்சீ தெரிவித்துள்ளார்.
















