தனி ஈழம் மலர வேண்டும் என சபதம் ஏற்குமாறு பாரதிராஜா கோரிக்கை

barathirajaமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தை காணும் அனைவரும் இலங்கையில் தனி ஈழம் மலர வேண்டும் என சபதம் ஏற்குமாறு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின் இறுதி நாள் விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். முன்னதாக பேசிய பழ.நெடுமாறன், இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டது போன்ற கொடிய சம்பவம், உலகில் உள்ள மற்ற தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும், தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின் கடைசி நாள் விழாவில் திரையுலகினர் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply