வாங்க ‘செகண்ட் மேரேஜ்’ பண்ணிக்கலாம்: ரசிகர்களுக்கு த்ரிஷா அழைப்பு!

trishaஒரு விதவைப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் இடத்தில் வந்த அந்த பெண்ணின் மகள் தனது அம்மாவுக்கு வாழ்த்து கூறுவார். பின்னர் அந்த மணப்பெண், மணமேடையில் மணமகனுடன் அக்னியை சுற்றி வருவார். அப்போது அந்த மகள் தானும் கூட வருவேன் என்று சொல்வார், அப்போது அந்த தாய் தனது மகளை வேண்டாம் என்று தடுப்பார். உடனே அங்கிருக்கும் மணமகன் அந்த சிறுபெண்ணை தன் மீது தூக்கி வைத்துக் கொண்டு அக்னியை சுற்றுவார்.

இப்படித்தான் பிரபல தனிஷ்க் நகைக்கடையின் லேட்டஸ்ட் விளம்பரம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இதில் மணமகனின் பெருந்தன்மை வெளிக்காட்டப்படுகிறது. அதாவது மணமகன் ஒரு விதவையை மனைவியாக ஏற்றுக் கொண்டதோடு, அவருடைய மகளையும் தன் மகளைப் போன்று நினைத்து இருப்பதாக அந்த விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ளது.

பார்க்கின்ற எல்லோரையும் ஒருகணம் நெகிழ வைக்கின்ற இந்த விளம்பரம் நடிகை த்ரிஷாவைவின் மனதையும் ‘டச்’ பண்ணி விட்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது திருமணம் குறித்து தனது ஆழமான கருத்தை பதிவு செய்ததோடு தனது ரசிகர்களுக்கும் பெண்களின் இரண்டாவது திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஒரு பெண் தனது கணவனை இழந்தாலோ அல்லது விவாகரத்து பெற்று விட்டாலோ அவர் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினால் இந்த சமூகம் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தநிலை மாற வேண்டும். இரண்டாம் திருமணம் செய்ய விரும்பும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை இன்றைய இளைஞர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்வது போல, ஆண்களும் பெண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் த்ரிஷா.

பெண்களைப் பற்றியை கவலை த்ரிஷாவுக்கு இப்படி இருந்தாலும் வயதாகிக் கொண்டே போகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் காலம் தள்ளிக்கொண்டிருப்பதை நினைத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளார்கள்.

சீக்கிரமே ஒரு மேரேஜ் பண்ணிங்கங்க மேடம்?

Tags: , ,

Leave a Reply