சனல் – 4 ஊடகர் குழுவுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

channel4இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் பல ஆவணப்படங்களை வெளியிட்டு அரசுக்கு சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடிகளையும் – சவால்களையும் ஏற்படுத்தி வரும் சனல் – 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேயின் கொழும்பு வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுக் காலை இலங்கை வந்த கெலும் மக்ரே தலைமையிலான குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய ஒற்றுமைக்கான இயக்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது. இதனால் விமானநிலைய வளாகத்தில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

விமான நிலையம் வந்திறங்கிய கெலும் மக்ரே தலைமையிலான சனல்-4 குழுவினரை, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில், “இலங்கையின் கொலைக்களங்கள்’, “தண்டிக்கப்படாத குற்றங்கள்’, “யுத்தசூனிய வலயம்’ முதலான ஆவணப்படங்களை வெளியிட்டிருந்த சனல் – 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே, இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றமை தொடர்பிலான ஆவணப்பட மொன்றையும் அண்மையில் வெளியிட்டார்.

இவர் வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படங்களால் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்குப் பெரும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.

பிரிட்டனில் இருந்தவாறு இலங்கை அரசுக்குப் பெரும் சவால்களை விடுத்த மக்ரேக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அட்டைகளைத் தாங்கியிருந்ததுடன், சனல்-4 புலிகளின் அநியாயங்களை வெளிப்படுத்தத் தவறி, இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கிய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோ­ங்களை எழுப்பினர். சனல் – 4 ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர் என சனல் – 4 ஊடகவியலாளரான ஜொனாதன் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply