வன்னி கிராமிய வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்

hospitalவவுனியா, மன்னார் மாவட்டங்களில் கிராமிய வைத்தியசாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் மற்றும் அயல் கிராம பொது அமைப்புக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்கால அபிவிருத்திக்கான திட்டமிடலின் போது மக்களின் உண்மையான பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றை முன்னுரிமைப்படுத்தி அத்தியாவசியமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மாகாண அரசு முன்னேடுக்கும். இந்த வகையில் சுகாதார சேவைகள் அபிவிருத்தி நிதியிலிருந்து தலா 12 மில்லியன் ரூபா வவுனியா பாலமோட்டை பகுதியிலிலும் மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் பகுதியிலும் வைத்தியர் விடுதியுடன் கூடிய கிராமிய வைத்தியசாலைகள் அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது காணிப்பிரச்சனை, சுகாதாரப்பிரச்சனை, வீதி அபிவிருத்தி, கல்வி வசதிகள் போன்ற பிரச்சனைகளை தாங்கள் எதிர்நோக்குவதாகவும் குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளின்றி கஸ்டங்களுக்கு உட்படுவதுடன் இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீட்டுவசதிகள் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்றும் பொது அமைப்புக்களினால அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Tags: , ,

Leave a Reply