முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா இடிக்க துடித்துக்கொண்டிருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்கக் கோரி நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைது செய்யப்படும் போதே வைகோ இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஹஹசேனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் அவர்களுடன் கைகோர்க்கும் அனைத்து தலைவர்களும் இலங்கைத் தமிழகர்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் தான். இனப்படுகொலையை நடத்தியவர்கள் தமிழர் நினைவிடங்களை இடித்ததைப் போன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, தஞ்சையில் திறக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தையும் இடிக்க பார்க்கிறார் என்றார்.
















