இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்காக, தமிழர் தாயகத்தின் யாழின் நுழைவாயிலான ஆனையிறவில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கனேடிய நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்.
கனேடிய அரசு சார்பில் பொது நலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற செயலர் நேற்றுக்காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
வரும் வழியில் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆனையிறவுக் கடல் நீரேரியை அண்டியதாக ஏ-9 வீதியில் மலர் வளையம் ஒன்றை வைத்து மெளன வணக்கம் செலுத்தினார்.
போரில் உயிர் நீத்தவர்களுக்காக போர் நடைபெற்ற பகுதியில் அஞ்சலி செலுத்திய முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி தீபக் ஒப்ராய் ஆவார்.
















