பிரித்தானிய பிரதமருக்கு இலங்கை எச்சரிக்கை?

uk-Prime-Minister-Davidபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் நோக்கில் கமரூன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அமர்வுகளில் பங்கேற்கும் பிரதமர், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. அமர்வுகளில் பங்கேற்க வேண்டாம் என தொழிற் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிரதமரிடம் கோரியிருந்தனர்.

எனினும், தாம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார். இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப இலங்கைக்கு அழைக்கவில்லை எனவும், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதற்காகவே நாட்டுக்கு அழைக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சுதந்திரமான நாடு எனவும், எந்தவொரு நாட்டினதும் காலணி அல்ல எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply