இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடடுக்கு இந்திய பிரதமர் கட்டாயம் வநதிருக்கவேண்டும். ஆனால் இந்திய பிரதமர் கலந்துகொள்ளாமை தொடர்பில் எம்மைவிட இந்தியாவே கவலையடையவேண்டும். இலங்கை கவலையடையவேண்டியதில்லை. என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வார் என்றே நாங்கள் நம்பினோம். ஆனால் உள்நாட்டில் அரசியல் இந்திய பிரதமரின் வருகையை தடுத்துவிட்டது. பொதுநலவாய மாநாடு என்பது இலங்கை தொடர்பான மாநாடு அல்ல. அது பொதுநலவாய மாநாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு தமது மக்களை பார்த்துக்கொள்ளவேண்டும். முாறாக எமது நாட்டு விடயங்களில் தலையிடுவதை விடுத்து தமது விடயங்கரளைளே தமிழ்நாடு பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொதுநலவாய மாநாட்டின் செய்தி சேகரிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தின் ஊடக பிரிவுக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
இந்த மாநாடு இங்கு நடைபெறுவது குறித்து இலங்கை பெருமையடைகின்றது. இந்த மாநாட்டின் காரணமாக உலகின் கவனம் இங்கு திரும்பியுள்ளது. 30 வருட பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்த நாடு என்ற வகையிலும் பொருளாதார பிரச்சினைகளை சந்தித்த நாடு என்ற வகையிலும் எமது தற்போது முன்னேறிவருகின்றது. சர்வதேச துறைமுகம் விமானம் நிலையம் அதிவேக வீதி என்பன அமைக்கப்பட்டுள்ளன.
புிரிட்டன் இல்லாமல் செய்த உணவில் தன்னிறைவடையும் சந்தர்பபம் தற்போது எமக்கு கிடைத்துள்ளது. அரசியல் ரீதியிலும் சுயாதீனமாக செயற்படுகின்றோம். எனவெ இந்த மாநாட்டை பெருமையுடன் நடத்துகின்றொம்.
இந்த மாநாட்டில் தொண்டர் பணியாற்றும் பாடசாலை மாணவர்களின் திறமைகளை நீங்கள் அவதானிக்கலாம். எமது நாட்டில் சிறந்த மனித வளம் காணப்படுகின்றது.
இதேவேளை அவுஸதிரேலிய பிரதமர் இலங்கை வருகின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். ஆஸி. என்பது நாட்டுடன் மிகவும் நெருங்கிய உறவைக்கொண்ட நாடு. எனவெ அவரின் வருகை முக்கியமானது.
விசேடமாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வருவார் என்று எதிர்பார்த்தோம். காரணம் இந்தியா எமது நெருங்கிய அயல்நாடாகும். ஏனவெ இந்தியா கட்டாயம் வநதிருக்கவேண்டும். ஆனால் அவர் வராமல் இருப்பதை இந்திய உள்நாட்டு அரசியல் தீர்மானித்துள்ளது. பொதுநலவாய மாநாடு என்பது இலங்கை தொடர்பான மாநாடு அல்ல. அது பொதுநலவாய மாநாடாகும்.
இலங்கையில் ஜனநாயகம் தொடர்பில் நீண்ட வரலாறு உள்ளது. அரசாங்கங்கள் ஜனநாயக ரீதியாக மாறும். சுர்வாதிகாரத்தில் எப்போதும் இருந்தததில்லை. 30 வருட பயங்கரவாத பிரச்சினை இருந்தது. துற்போது அந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது. தற்போது மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.
இது பொது நலவாய மாநாடு. வெளிநாடுகள் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவே இங்கு வந்துள்ளன. வேறு விடயங்கள் குறித்து பேச வரவில்லை. வேறு விடயங்கள் குறித்து பேசுவதாயின் அந்த நாடுகள் வேறு விஜயங்களை மேற்கொண்டு இங்கு வரவேண்டும். பொதுநலவாயத்துக்காக வருகின்றவர்கள் பொதுநலவாயம் குறித்தே பேசவேண்டும். வேறு விடயங்கள் குறித்து பேசுவதில்லை. பொதுநலவாய மாநாட்டை நடத்துகின்ற இலங்கை ஒரு இறைமை நாடாகும்.
இதேவேளை தமிழ்நாடு தமது மக்களை பார்த்துக்கொள்ளவேண்டும். மாறாக எமது நாட்டு விடயங்களில் தலையிடுவதை விடுத்து தமது விடயங்கரளைளே தமிழ்நாடு பார்க்கவேண்டும். எமது நாட்டில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
உதாரணமாக வலிகாமம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது அரசாங்கத்தினால் அந்த மக்களுக்கு வழங்கபபட்டுள்ள உரிமையாகும். ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு அந்த உரிமையில்லை. துமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை பாருங்கள். முதலில் அந்த மக்களுக்கு உரிமையை வழங்கவேண்டும்.
இதேவேளை இலங்கை வந்துள்ள செனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்கரே வவுனியா செல்லவிடாமல் தடுக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமலேயே சென்று விட்டார்.
















