பிரித்தானிய பிரதமர் தமிழ் சமூகத்தின் வாக்குகளுக்காக செயற்படுகிறார்! ரம்புக்கல

hegalia3இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று கூறுவதற்காக காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறது.

கேமரன் பிரிட்டனில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார் என்றும் இலங்கை செய்தித் தொடர்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவல்ல பேசுகையில் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இந்த மாநாட்டுக்காக இலங்கை வந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், இலங்கைக்கு வந்து கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகளைக் கேட்பது சரியானது என்றும் அதை கேமரன் செய்வார் என்றும் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் கேமரன் இன்று இலங்கை வந்து சேர்கிறார்.

Tags: , , ,

Leave a Reply